விருதுநகரில் மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் பலி

மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகரில் மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் பலி
Published on

விருதுநகர்:

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் கருப்பசாமி (வயது17). பிளஸ்-2 மாணவர்.

தனியார் பள்ளியில் படித்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பசாமி சேர்க்கப்பட்டார்.

ஒரு வாரம் சிகிச்சை பெற்றும் கருப்பசாமி குணமாகவில்லை. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி நேற்று இறந்தார்.

மர்ம காய்ச்சலுக்கு மாணவர் இறந்த சம்பவம் பர்மா காலனியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பர்மா காலனியில் சுகாதார சீர் கேடு நிலவுவதே மர்ம காய்ச்சலுக்கு காரணம் என கூறும் மக்கள், இதனை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com