விருதுநகர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

விருதுநகர் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே மர்மக் காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
Published on

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள ஆவியூரைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 20). இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது.

இதையடுத்து இவர் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் முத்துலட்சுமி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், முத்துலட்சு மியை மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com