சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மரணம்
மரணம்
Published on

ராயபுரம்:

மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவைச் சேர்ந்தவர் கவுரிசங்கர். ஆட்டோ டிரைவரான இவருக்கு 1½ வயதில் பூர்ணிமா என்ற மகள் இருந்தாள். கடந்த சில நாட்களாக குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் மோசமான நிலையில் சோர்வுற்று காணப்பட்டாள்.

ஆபத்தான நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முத்தையால் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com