நர்சு மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி எஸ்.பி. அலுவலகத்தில் தாய் மனு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்த நர்சு மர்மமான முறையில் இறந்தார். மரணம் தொடர்பாக அவரது தாய் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
நர்சு மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி எஸ்.பி. அலுவலகத்தில் தாய் மனு
Published on

ஈரோடு:

பவானி அடுத்த ஜி.டி.நாயுடு காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் மேரி (வயது 21). இவர் வளையங்காரம் பாளையம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக நர்சாக பணி புரிந்தார். இவர் கடந்த 5-11-2017 அன்று மர்மமான முறையில் இறந்தார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தவர்கள் மேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் மேரியின் தாய் வசந்தா தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார். தனது மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் மேரியின் தாய் வசந்தா மற்றும் உறவினர்கள் இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தனது மகள் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மேரியின் தாய் வசந்தா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com