வாழப்பாடி அருகே இளம்பெண்ணிடம் கவரிங் நகையை பறித்த மர்ம கும்பல்

வாழப்பாடி அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் கவரிங் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
வாழப்பாடி அருகே இளம்பெண்ணிடம் கவரிங் நகையை பறித்த மர்ம கும்பல்
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சின்ன பழனியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சாந்தி (வயது 26). நேற்று மாலை இவர் மங்களபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்தனர்.

சாந்தி அணிந்திருந்தது கவரிங் நகை எனக் கூறப்படுகிறது. தங்கத்தை விட கவரிங் நகை உறுதியாக இருந்ததால், மர்ம நபர்கள் பலமாக இழுத்ததில் சாந்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கழுத்தில் காயமடைந்த சாந்தியை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண் சாந்தியிடம் பறித்த சங்கிலி கவரிங் என தெரிந்ததால், அந்த சங்கிலியை அப்பகுதியிலேயே மர்ம கும்பல் போட்டு விட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. வாழப்பாடி பகுதியில் மீண்டும் நகை பறிப்பு கும்பல் ஊடுருவியுள்ளது, அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com