வத்தலக்குண்டு அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்

வத்தலக்குண்டு அருகே மர்மமான முறையில் இறந்த புதுப்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே கே.உச்சப்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார். விவசாயி. இவருக்கும் பாண்டி மகள் ஐஸ்வர்யா(வயது19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் கணவன்-மனைவி உச்சபட்டியில் வசித்து வந்தனர். ஐஸ்வர்யா நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியில் உள்ள மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியை தொடர்பு கொண்டு தங்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என செல்போனில் பேசியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி மற்றும் அவரது மனைவி விரைந்து சென்று மகளை பார்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கணவன் வீட்டார் கூறியுள்ளனர். எங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பாண்டி விருவீடு போலீசில் புகார் அளித்தார்.

வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் வழக்குபதிவு செய்து தலைமறைவான சரத்குமாரை தேடி வருகின்றனர்.

ஐஸ்வர்யா உடல் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்முடிவு வந்தபிறகே கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும். திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com