மயிலாப்பூரில் ஆஸ்பத்திரி கிளினிக்கில் ரூ.3 லட்சம் கொள்ளை

மயிலாப்பூரில் ஆஸ்பத்திரி கிளினிக்கில் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாப்பூரில் ஆஸ்பத்திரி கிளினிக்கில் ரூ.3 லட்சம் கொள்ளை
Published on

சென்னை:

மயிலாப்பூர் மாதா சர்ச் சாலையில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் தியாகராஜன்.

நேற்று இரவு 11 மணி அளவில் ஆஸ்பத்திரி கிளினிக்கை மூடிவிட்டு தியாகராஜன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று காலை கிளினிக்கின் அருகில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ள ஜேம்ஸ் என்பவர் கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது கிளினிக்கின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி டாக்டர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தார்.

அப்போது மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிளினிக்கில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் அருகில் உள்ள பேக்கரி கடையிலும் கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர் அதே பகுதியில் உள்ள அகஸ்டின் என்பவரின் காய்கறி கடை உள்பட 3 கடைகளிலும் கொள்ளை கும்பல் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. இந்த 5 கொள்ளை சம்பவங்களிலும் ஒரே நபர்கள்தான் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com