மயிலாப்பூரில் ஜன்னலை உடைத்து நகை-பணம் கொள்ளை

மயிலாப்பூரில் ஜன்னலை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

சென்னை:

மயிலாப்பூர் நொச்சி நகரை சேர்ந்தவர் சொக்க லிங்கம்.

இவர் சொந்த ஊரான செய்யூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சொக்கலிங்கம் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொக்க லிங்கத்துக்கு தெரிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா? இல்லை அவர் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்களா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com