மயிலாப்பூரில் லிப்ட் தருவதாக ஏமாற்றி முதியவரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி கொள்ளை

மயிலாப்பூரில் லிப்ட் தருவதாக ஏமாற்றி முதியவரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாப்பூரில் லிப்ட் தருவதாக ஏமாற்றி முதியவரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி கொள்ளை
Published on

சென்னை:

மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது82). இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ராமமூர்த்தியிடம் லிப்ட் தருகிறேன் என்று கூறினார். இதனால் அவர் அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது ராமமூர்த்தியை கீழே இறக்கி விட்டபோது அவரிடம் இருந்த பையை பறித்து கொண்டு வாலிபர் தப்பினார். அந்த பையில் ரூ.14 ஆயிரம், 4 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன.

பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி ரூ.75 ஆயிரத்தை மர்ம நபர் எடுத்தார்.

இதுகுறித்து ராமமூர்த்தி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com