முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த தொண்டியக்காடு மேலக்காட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் இடும்பாவனம் பண்ணை தோப்பு சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தொண்டியக்காடு மேலக்காட்டை சேர்ந்த தங்கராசு மகன் அகிலன் (வயது20) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் அகிலன் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com