முத்துப்பேட்டை அருகே வாகனம் மோதி டாஸ்மாக் விற்பனையாளர் பலி

முத்துப்பேட்டை அருகே வாகனம் மோதி டாஸ்மாக் விற்பனையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

முத்துப்பேட்டை:

திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முருகானந்தம் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com