முத்துப்பேட்டை அருகே லாரி மீது கார் மோதல்-பெண் பலி

முத்துப்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த வரம்பியம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது குடும்பத்துடன் சம்பவத்தன்று தூத்துக்குடி அருகில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு காரில் சென்றார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இதில் சரவணன் மனைவி சாந்தி(வயது39) உள்பட 7 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது சாந்தியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com