பஸ் தொழிலாளர் பிரச்சனை: அடக்குமுறையை கையாள்வது கண்டனத்துக்குரியது- முத்தரசன்

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அடக்குமுறையை கையாள்வது கண்டனத்துக்குரியது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பஸ் தொழிலாளர் பிரச்சனை: அடக்குமுறையை கையாள்வது கண்டனத்துக்குரியது- முத்தரசன்
Published on

சென்னை:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசின் தவறான அணுகு முறை காரணமாக, அரசுபோக்குவரத்து தொழிலாளர்கள் மூன்றாம் நாளாக தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். தொழிற்சங்க தலைவர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வுகாண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் நிலையில் அரசு அதனை பயன்படுத்தி தீர்வு காண்பதற்கு மாறாக அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண முன்வரவேண்டுமென மீண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com