

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் ‘முத்தலாக்’ நடைமுறை சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த நடைமுறைக்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசை அறிவுறுத்தியது.
இதையடுத்து முத்தலாக் தடை மசோதா கடந்த 28-ந்தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் நடைமுறையை பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.