1-ந்தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் - வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உத்தரவு

வாகன ஓட்டுனர்கள் அரசு ஆணையின்படி, 1-ந்தேதி முதல் அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
1-ந்தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் - வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உத்தரவு
Published on

சென்னை:

சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்லும்போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அண்மையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட உத்தரவில், ‘வாகன ஓட்டுனர்கள் அரசு ஆணையின்படி, 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com