உயிரை உறைய வைத்த மலைப்பாதை விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய போலீசார்

உத்தரகாண்ட் மாநிலம் கெம்டி நீர்வீழ்ச்சி அருகே இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய பேருந்து
விபத்தில் சிக்கிய பேருந்து
Published on

முசோரி:

இந்தோ திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள், உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே இன்று பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். குறுகிய வளைவுகளைக் கொண்ட சாலையில் சென்றபோது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாகச் சென்ற பேருந்து, வளைவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. கெம்ட் நீர்வீழ்ச்சி அருகே இந்த விபத்து ஏற்பட்டது.

பேருந்தின் முன்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. உள்ளே இருந்த வீரர்கள் ஒரு நிமிடம் அப்படியே உறைந்துபோயினர். பின்னர் சுதாரித்த அவர்கள், பேருந்தில் இருந்து லாவகமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து கொஞ்சம் அதிக வேகத்தில் வந்திருந்தால் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com