ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு மசூதி ஒன்றிற்கு தேசிய கொடியின் மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தியுள்ளனர்.
ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல்
Published on

ஜெய்ப்பூர்:

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம் முழுவதுமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் களை கட்டியுள்ளது. தலைநகர் புதுடெல்லி, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. சிறப்பு தொழுகைகளில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு மசூதி ஒன்றிற்கு தேசிய கொடியின் மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து ஒளிரவிட்டுள்ளனர்.

பில்வரா ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹபிபி மசூதியில் இந்த மூவர்ண விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. மூவர்ண விளக்கு ஒளிரவிடப்பட்ட மசூதியை அப்பகுதி வாசிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

மூவர்ணம் நமது நாட்டின் பெருமை என்று அந்த மசூதியின் இமாம் முகமது ஜாபர் முக்தர் அசாமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com