வீட்டில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

முசிறி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

முசிறி:

முசிறி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளில் விற்கப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மேற்பார்வையில் தனிப்பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முசிறி அருகே பொன்னாங்கன்னிபட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர். அங்கு சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்து, அவற்றைபறிமுதல் செய்து முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜிவ்காந்தி வழக்குப்பதிந்து பொன்னாங்கன்னி பட்டி கிராமத்தை சேர்ந்த பாரதிதாசன்(வயது 32), மோகன்ராஜ்(28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குழந்தைவேல்(45) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com