முசிறி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

முசிறி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

முசிறி:

முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியின் போது முசிறி அருகே சோளம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (27) காவிரி ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிந்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மாறன், மாவட்ட சூப்பிரண்டு ஜியா வுல்ஹக் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து திருச்சி கலெக்டர் சிவராசு குண்டர் தடுப்பு காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் சுரேசை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com