முசிறி பஸ்நிலையத்தில் வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் உள்பட 4 பேர் கைது

முசிறி நகர பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த நான்கு பேரை முசிறி போலீசார் கைது செய்தனர்.
முசிறி பஸ்நிலையத்தில் வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் உள்பட 4 பேர் கைது
Published on

முசிறி:

முசிறி அடுத்த மாங்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(45). நேற்று முசிறியிலிருந்து மாங்கரைப்பேட்டை செல்வதற்காக முசிறி நகர பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக ரமேஷ் காத்திருந்தார்.

அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் உட்பட 4 பேர் ரமேஷிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர். அவர் சத்தம் போட்டார். உடனே 4 பேரும் தப்பி ஓடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓடிய நான்கு பேரையும் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் விசாரணை மேற்கொண்டதில் பிக்பாக்கெட் அடித்தவர்கள் தொட்டியத்தை சேர்ந்த உஷா (32), முசிறியை சேர்ந்த ராஜா (45), செல்வராஜ்(52), பெரியசாமி (37) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பிக்பாக்கெட் அடித்த ரூ ஆயிரம் மீட்கப்பட்டது. ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பெண் உள்பட நான்கு பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com