காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்தோம் - முஷரப்பின் பழைய வீடியோ ‘வைரல்’

காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வருபவர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்பி வைப்போம். அவர்கள் இந்திய ராணுவத்துடன் போரிடுவார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ள பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பர்வேஸ் மு‌‌ஷரப்
பர்வேஸ் மு‌‌ஷரப்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ராணுவ தளபதியாகவும், பின்னர், அதிபராகவும் இருந்தவர் முஷரப். இவர், 2015-ம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியின் வீடியோவை குவெட்டா நகரைச் சேர்ந்த ஹமீது மன்டோகைல் என்பவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். உடனே பலரும் பகிர்ந்ததால், அந்த வீடியோ ‘வைரல்’ ஆனது.

அதில், முஷரப் கூறியிருப்பதாவது:-

காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வருபவர்களுக்கு அமோக வரவேற்பு அளித்தோம். அவர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்பி வைப்பது வழக்கம். அவர்கள் இந்திய ராணுவத்துடன் போரிடுவார்கள். அவர்களை போராளிகளாக கருதுகிறோம். அவர்கள் எங்கள் ஹீரோக்கள். பின்னாளில், லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தலையெடுத்தன.

1979-ம் ஆண்டு, சோவியத் படைகளை விரட்டுவதற்காக, ஆப்கானிஸ்தானில் மத போராளிகளை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியது. உலகம் முழுவதும் இருந்து முஜாகிதீன்களை கொண்டு வந்து பயிற்சி அளித்து ஆயுதங்களை கொடுத்தோம்.  அவர்களும் எங்கள் ஹீரோக்கள்தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com