முருங்கப்பாக்கத்தில் வாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல்

முருங்கப்பாக்கத்தில் வாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவை முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ராம்ராஜ் (வயது 24). இவரும், இவரது தம்பி அய்யப்பன் மற்றும் இவர்களது நண்பர் சிலம்பரசன் உள்ளிட்டோர் அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலை சுத்தம் செய்து கோவிலை பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஆனால், இது, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (28) என்பவருக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமராஜும், சிலம்பரசனும் அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவை பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ராஜேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி செங்கல்லால் ராமராஜை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற சிலம்பரசனையும் கல்லால் தாக்கினார். அதோடு ரவுடிகளை அழைத்து வந்து கொலை செய்து விடுவேன் என்று ராஜேஷ் மிரட்டினார்

இதுகுறித்து ராமராஜ் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்கு பதிவு செய்து ராஜேசை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com