கொலை வழக்கு- வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை அளித்து காஞ்சிபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோர்ட்டு உத்தரவு
கோர்ட்டு உத்தரவு
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த சாலவாக்கம் அருகே சிறுதா முர்பட்டா காலனி பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (55).

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்கா தரன் என்பவரது மகன் கிருஷ்ணாவுக்கும் (25) முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7.11.2014 அன்று பச்சையப்பனை கிருஷ்ணா கொலை செய்தார்.

இதையடுத்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசு தரப்பில் சாட்சிகளை ஆஜர் செய்தனர். இரு தரப்பிலும் விசாரணை செய்ததில் கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் வழங்கி காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.கயல்விழி தீர்ப்பு வழங்கினார்.

ரூ.25 ஆயிரம் அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத காலம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.இளவரசு ஆஜரானார். கிருஷ்ணா புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com