வடபாதிமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்

வடபாதிமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாமரைசெல்வன் மீது வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் அவரை தேடி வருகிறார்.
கொலை மிரட்டல்
கொலை மிரட்டல்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருபவர் பார்த்தசாரதி (வயது 56).

இந்த நிலையில் பள்ளியில் பணியில் இருந்த பார்த்தசாரதியிடம் அதே ஊரை சேர்ந்த தாமரைசெல்வன் , தனக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத்தில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, பெற்றோர்கள் கூட்டம் நடத்தி அதில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை கேட்டு ஆத்திரம் அடைந்த தாமரைசெல்வன், திடீரென ஆவேசத்தில் பார்த்தசாரதியை திட்டினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதுபற்றி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, வடபாதிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் தாமரை செல்வனை தேடி வருகிறார்.

தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com