

பெர்லின்:
ஜெர்மனி நாட்டின் பவேரியா மாகாணத்தின் தலைநகர் முனீச்சில் உள்ள புறநகர் ரெயில் நிலையம் ஒன்றில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மர்மநபர் நடத்திய ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் போலீசார் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சுமார் 4 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெயில்வே சுரங்கப் பாதையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பின்னர் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரின் தலையில் சுட்டனர். காயம் அடைந்த நிலையில் அவன் பிடிபட்டான். அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும், இது ஒரு தீவிரவாத தாக்குதல் இல்லை என்றும் நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் முனீச் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.