மும்பை தாக்குதல் நினைவு தினம்- காவலர் நினைவிடத்தில் முதல்வர், ஆளுநர் மரியாதை

மும்பை தாக்குதல் நினைவு தினத்தையொட்டி காவலர் நினைவிடத்தில் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஆளுநர், முதல்வர்.
காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஆளுநர், முதல்வர்.
Published on

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியமான 8 இடங்களில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

நாட்டையே உலுக்கிய இந்த கோர தாக்குதலின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தாக்குதலில் பலியானவர்களுக்கு தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், மும்பை தாக்குதலின் 11ம் ஆண்டு நினைவை முன்னிட்டு, மும்பையில் உள்ள காவலர் நினைவிடத்தில் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com