மும்பை: கட்டிட விபத்தில் சிக்கிய 23 பேர் உயிருடன் மீட்பு, 5 பேர் பலி

மும்பையில் நேற்று நடந்த கட்டிட விபத்தில் சிக்கிய 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
மீட்பு பணி
மீட்பு பணி
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மும்பையில் உள்ள ஃபொர்ட் என்ற பகுதியில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் கனமழை காரணமாக நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கட்டிடத்தில் தங்கி இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவலறிந்த தியணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்த 23 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு 

அனுப்பி வைத்தனர். ஆனாலும், இந்த கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com