அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
துப்பாக்கி சூடு நடந்த இடம்
துப்பாக்கி சூடு நடந்த இடம்
Published on

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், மிகவும் பரபரப்பான சாலை கொலம்பியா சாலை. வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நேற்று இரவு நடந்து சென்றவர்கள் மீது திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதனால் சாலையில் சென்றவர்கள் சிதறி ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com