

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரான ராம்கோபால் யாதவின் 71வது பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு, ராம்கோபால் யாதவிடம் ஆசி பெற்றார். அப்போது, இந்த விழாவில் முலாயம் சிங் ஏன் பங்கேற்கவில்லை என அகிலேஷிடம் நிருபர்கள் கேட்டனர்.
அவர்களது கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ், ’’முலாயம் சிங்குக்கு என் மீது தான் கோபம். ராம்கோபால் யாதவ் மீது கோபம் அல்ல. ராம்கோபால் யாதவ் கட்சியையும், கட்சி சின்னத்தையும் பாதுகாத்துள்ளார். அவரது வழிகாட்டுதலில் ஆட்சியில் இருக்கும்போது பல பெரிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். ஆக்ராவில் இருந்து லக்னோ வரை செல்லும் விரைவு சாலை திட்டத்தை 22 மாதங்களில் முடித்துள்ளோம். இதுபோன்ற திட்டத்தை வேறு எந்த அரசாவது குறுகிய காலத்தில் முடித்துள்ளதா?’’ என கேள்வி எழுப்பினார்.