மேகாலயா முதல் மந்திரி முகுல் சங்மா இரு தொகுதிகளிலும் வெற்றி

மேகாலயா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் காங்கிரசை சேர்ந்த முதல் மந்திரி முகுல் சங்மா வெற்றி பெற்றுள்ளார்.
மேகாலயா முதல் மந்திரி முகுல் சங்மா இரு தொகுதிகளிலும் வெற்றி
Published on

ஷில்லாங்:

தலா 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாநிலங்களில் ஆட்சியமைக்க 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

மேகாலயாவைப் பொருத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சி துவக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 11 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தது. பா.ஜ.க. 6 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 14 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. 

இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் காங்கிரசை சேர்ந்த முதல் மந்திரி முகுல் சங்மா வெற்றி பெற்றுள்ளார்.

மேகாலயாவில் அம்பாதி மற்றும் சாங்சாக் தொகுதிகளில் காங்கிரசை சேர்ந்த முதல் மந்திரி முகுல் சங்மா போட்டியிட்டுள்ளார்.

அம்பாதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பகுல் சந்திரா ஹஜோங்கை விட 8,104 வாக்குகள் வித்தியாசத்திலும், சாங்சாக் தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ஷிராவை விட 1,830 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார். 

அதேவேளையில், புல்பெரி தொகுதியில் போட்டியிட்ட மேகாலயா சபாநாயகரும் காங்கிரஸ் வேட்பாளருமான அபு தாஹெர் மண்டல், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்மட்டூர் மொமினிடம் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

#tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com