பாலியல் புகார் - முகிலன் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் முகிலன் ஜாமீன் வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முகிலன்
முகிலன்
Published on

மதுரை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மாயமான முகிலனை 5 மாதத்திற்கு பிறகு திருப்பதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மாயமான காலத்தில் முகிலன் எங்கிருந்தார்? என தெரிவிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், போலீசார் முகிலன் மீது வேண்டுமென்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தெரிவித்து பதில் மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து வழக்கை நாளை மறுநாள் (13-ந்தேதி) வழக்கை ஒத்திவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com