முதலியார்பேட்டையில் தொழில் போட்டியில் லாரி உரிமையாளர் மீது தாக்குதல்

முதலியார்பேட்டையில் தொழில் போட்டியில் லாரி உரிமையாளரை தாக்கிய மற்றொரு லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
முதலியார்பேட்டையில் தொழில் போட்டியில் லாரி உரிமையாளர் மீது தாக்குதல்
Published on

புதுச்சேரி:

புதுவை முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜசேகர் (வயது 47). லாரி உரிமையாளர். இவருக்கும் நைனார் மண்டபத்தை சேர்ந்த மற்றொரு லாரி உரிமையாளரான குமார் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜசேகர் முதலியார்பேட்டை பாரதிதாசன் நகரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார், ராஜசேகரை வழி மறித்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில், காயம் அடைந்த ராஜசேகர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளர் குமாரை தேடி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com