முதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

முதலியார்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை பிராமினாள் வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்பிகா.

சமீப காலமாக கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று காலையும் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது அம்பிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

அந்த நேரத்தில் தற்கொலை முடிவை கையில் எடுத்த சங்கர் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அம்பிகா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com