முதலியார்பேட்டையில் கடைக்கு சென்ற புதுப்பெண் மாயம்

முதலியார்பேட்டையில் கடைக்கு சென்ற புதுப்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
முதலியார்பேட்டையில் கடைக்கு சென்ற புதுப்பெண் மாயம்
Published on

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது26), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் முதலியார்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த பரமசிவம் மகள் சரண்யா (20) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று சரண்யா கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு சரண்யா வீடு திரும்பவில்லை. கணவர் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சரண்யா இல்லை. 

இதையடுத்து பரமசிவம் தனது மகள் மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவிசப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குபதிவு செய்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்கள்.

இதேபோல் அரியாங்குப்பம் மணவெளி சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கோட்டக்குப்பத்தில் மர பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் சுப்ரஜா (வயது17) இவர் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தோழி வீட்டுக்கு சென்று வருவதாக சுப்ரஜா பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சுப்ரஜா இல்லாததால் வேல்முருகன் தனது மகள் மாயமானது குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com