

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் இன்று 2வது கட்டமாக நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையடுத்து இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று விறுவிறுப்பாக வாக்காளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கலந்துக் கொண்டார்.
இதனையடுத்து இன்று காலை, ஜார்க்கண்ட்டின் ராஞ்சி தொகுதியில் வாக்களிக்க வேண்டி, சிறப்பு தனி விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து ஜார்க்கண்ட் வந்தடைந்தார்.