எச்.வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள், ஊழியர்கள் அஞ்சலி

தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு பொதுமக்கள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எம்பி வசந்தகுமார்
எம்பி வசந்தகுமார்
Published on

சென்னை:

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி , தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வசந்தகுமார் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு தி நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வசந்த் & கோ நிறுவன ஊழியர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காலை 10.30 மணி வரை  வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்குமேல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது.

மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அகஸ்தீஸ்வரத்தில்  வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com