சூளகிரி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் ஆற்றில் பிணமாக மீட்பு

சூளகிரி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் தென் பெண்ணை ஆற்றில் பிணமாக கிடந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சூளகிரி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் ஆற்றில் பிணமாக மீட்பு
Published on

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள ஜுஜு வாடி பகுதியை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவர் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சூளகிரிக்கு வந்தார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது சூளகிரி அடுத்துள்ள கோபசந்திரம் தென் பெண்ணை ஆற்றில் திம்மராயப்பா பிணமாக கிடப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் திம்மராயப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com