திருவாண்டார் கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் வாலிபர் பலி

திருவாண்டார் கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் வாலிபர் பலியானார்.
திருவாண்டார் கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் வாலிபர் பலி
Published on

திருபுவனை:

மதகடிப்பட்டு அருகே சிலுக்காரி பாளையம் மயிலம் பாதையை சேர்ந்தவர் துரை. இவரது மகன் அரி என்ற சுந்தர் (வயது 24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து திருவாண்டார் கோவிலில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக் கிளில் வந்தார்.

அங்குள்ள டி.வி.எஸ். நிறுவனம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட சுந்தர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சுந்தர் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com