காளையார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்பை பலன் அளிக்காமல் இறந்தார்.
காளையார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் பலி
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள நாட்டசரன் கோட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் ரஞ்சித் (வயது 21), பாஸ்கரன் மகன் பிரபு (20), மூர்த்தி மகன் அஜித் (22), இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காளையார்கோவிலில் இருந்து நாட்டசரன்கோட்டைக்கு வந்து கொண்டி ருந்தனர். அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

உடனே அஜித், ரஞ்சித், பிரபு ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பலியானார்.

பலியான அஜித் முத்துப்பட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். படுகாயம் அடைந்த மேலும் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com