அரச்சலூர் அருகே மோட்டர் சைக்கிளில் சென்றவர் மின் கம்பத்தில் மோதி பலி

அரச்சலூர் அருகே மோட்டர் சைக்கிளில் சென்றவர் மின் கம்பத்தில் மோதி பலி

அரச்சலூர் அருகே மோட்டர் சைக்கிளில் சென்ற கார் டிரைவர் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

அரச்சலூர்:

அரச்சலூர், சென்னிமலை மெயின் ரோடு நடுப் பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது46). கார் டிரைவர். இவரது மனைவி சித்ரா (38).

சம்பவத்தன்று சென்னிமலைக்கு மோட்டார் சைக்கிளில் சங்கர் சென்று கொண்டிருந்தார். சென்னிமலை- அரச்சலூர் ரோட்டில் செல்லும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

இதில் சங்கருக்கு தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கன வே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com