லாலாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

லாலாப்பேட்டையை அடுத்த மகாதானபுரம் பிரிவு ரோட்டில் நடந்து வந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.
லாலாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

லாலாப்பேட்டை: 

லாலாப்பேட்டை நந்தன் கோட்டை காலனியை  சேர்ந்த மாரியப்பன் (72)நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு தனது உறவினர் வீடான பொய்ய புத்தூர் சென்று விட்டு தனது ஊறான  நந்தன்கோட்டைக்கு திரூச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டி இருந்தார்.  அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் பொய்யபுத்துறை சேர்ந்த சுதாகர் என்பவர் வேகமாக வந்து மாரியப்பன் மீது எதிர்பாரத விதமாக மோதி விட்டார். 

இதில் மாரியப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு அருகில் உள்ளவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com