மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கட்டிட மேஸ்திரி பலி

மத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் கட்டிட மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கட்டிட மேஸ்திரி பலி
Published on

ஊத்தங்கரை:

வேலூர் மாவட்டம், கும்பிடிகாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சக்திவேல் (வயது20). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

சக்திவேல் தனது உறவினர் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம், புட்டூர் கிராமத்திற்கு நேற்றிரவு வேலூரில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஆம்பள்ளி தனியார்  ஜுஸ் கம்பெனி அருகே செல்லும் போது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 

 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com