காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து
விபத்து
Published on

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் பழைய தருமபுரி எஸ்.கொட்டாவூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 45). அதேஊரைச் சேர்ந்த கலைச்செல்வன் (20) ஆகிய இருவரும் கட்டிட வேலை செய்பவர்கள் ஆவர். இவர்கள் காரிமங்கலத்தில் கட்டிட வேலையை முடித்து விட்டு மாலை 7 மணி அளவில் தருமபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கெரகோடஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வந்துபோது முன்புசென்ற லாரியை கடக்க முயன்றபோது பின்னால்வந்த கார் உரசியதால் அருகில் சென்ற லாரிமோதி கீழே விழுந்தனர். 

இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே தலைசிதறி பலியானார். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கலைச்செல்வன் கை மற்றும் கால்முறிவு ஏற்பட்டு பலத்த காயத்துடன் இருந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இதனால் காரிமங்கலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com