மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து வக்கீல் பலி

கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து வக்கீல் பலி
Published on

கோவை:

கோவை இடையர் பாளையம் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சோபன் பாபு (வயது 33). வக்கீல். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆண்டவர் (28) என்பவருடன் வழக்கு சம்பந்தமாக திருப்பூர் கோர்ட்டுக்கு சென்றார்.

வேலை முடிந்ததும் 2 பேரும் இரவு கோவைக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சோபன் பாபு ஓட்டி வந்தார். இரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இந்த விபத்தில் சோபன்பாபு, ஆண்டவர் ஆகியோர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் சோபன்பாபு பரிதாபமாக இறந்தார். ஆண்டவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com