மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே உள்ள பொம்மன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன நாகப்பன் (வயது 60). கூலி தொழிலாளி.

இவர் நேற்று மாலை மாரண்ட அள்ளி- வெள்ளி சந்தை சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை சின்னநாகப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com