தேனி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

தேனி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து
விபத்து
Published on

தேனி:

தேனி அருகே உள்ள வீரபாண்டியை அடுத்த மதுராபுரி எஸ்.அழகாபுரியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24). சம்பவத்தன்று இவரும் இவரது நண்பர் மகேந்திரனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். பின்னால் காமாட்சிபுரம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

இருவரும் முந்திச் செல்ல முயன்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். 

இது பற்றி வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com