ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்: மெக்கானிக்- வங்கி மேலாளர் பலி

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் மெக்கானிக்- வங்கி மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

ஒரத்தநாடு:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ராயர் தெருவில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் ராஜேஷ்(வயது30). இவரும், இவரது நண்பரான கொத்தனார் ஆக உள்ள கணேசன் என்பவரும் நேற்று மாலை தஞ்சாவூருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஊர் திரும்பியுள்ளனர்.

உளுர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பட்டுக்கோட்டை அருகே உள்ள இரண்டாம் புலிக்காடு கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக பணிபுரியும் ஆந்திர மாநிலம் ஓங்கல் பிரகாசம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (36) என்பவர் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் உயிரிழந்தார். மேலும் கணேசனின் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் திறந்ததால் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் கணேசனின் பாதி உடல் கருகியது.

மேலும் வங்கி மேலாளர் பிரவீன்குமார் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

படுகாயமடைந்த கணேசனை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்தில் பலியான ராஜேஷுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com