மோட்டார் சைக்கிள் மோதி விசைத்தறி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி விசைத்தறி தொழிலாளி பலி
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ராஜாகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 65). விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக மொபட்டில் திருச்செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கிரியேறிபட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் தேவசகாயம் ஓட்டிச் சென்ற மொபட் மீது வேகமாக மோதியது. 

இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவசகாயம் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com