மதுக்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- என்ஜினீயரிங் மாணவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாப உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுக்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- என்ஜினீயரிங் மாணவர்  பலி
Published on

கோவை:

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கோசி. இவரது மகன் ஜோ ஜோ (வயது 21). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று இரவு இவர் தனது நண்பரான பத்தினம் திட்டாவை சேர்ந்த விஷ்தின் (23) என்பவருடன் சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்ற போது அந்த வழியாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஜோஜோ சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜோஜோ, விஷ்தின் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜோஜோ பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த விஷ்தின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com