நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: என்ஜினீயர் பலி

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்தார்.
விபத்து
விபத்து
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராமுடையானூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). என்ஜினீயரான இவர் கார் வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் நாமக்கல் அருகே உள்ள அணியாபுரம்புதூரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட உறவினரை பார்க்க சென்றார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த கோகுல் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கி வந்தார்.

கோகுல் மோட்டார் சைக்கிளை ஓட்ட, ராஜேஸ் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். நாமக்கல்-மோகனூர் சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே வந்தபோது வகுரம்பட்டியை சேர்ந்த காளியண்ணன் என்பவர் மொபட்டில் சாலையின் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராத விதமாக மோதின.

இந்த விபத்தில் ராஜேஷ், கோகுல் ஆகிய இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி என்ஜினீயர் ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com